

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது. 5 ஆயிரத்து 531 வாக்குச் சாவடிகளில் நடைபெறும் தேர்தலில் 58 லட்சத்து, 50 ஆயிரத்து 379 பேர் வாக்களிக்கின்றனர்.
இந்த தேர்தலில் போட்டியிடு வதற்கான வேட்புமனுக்கள், 15 மாநகராட்சி மண்டல அலுவலகங் களில் 36 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் பெறப்பட்டன. இதில், மொத்தம் 3,155 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக் களை திரும்பப் பெற நாளை மறு தினம் (அக்.6) கடைசி. அன்றே இறுதி பட்டியல் வெளி யிடப்படும்.
இரவு வரை மனுதாக்கல்
அதிமுக தவிர மற்ற கட்சிகள் தாமதமாக கூட்டணி மற்றும் பங்கீடு தொடர்பாக முடிவெடுத்து வேட்பாளர்களை அறிவித்ததால், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, அனைத்து அலுவலகங்களிலும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 5 மணிக்கு மேல் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியாதோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, இரவு 7 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன.