முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் இன்று (அக்.10) நள்ளிரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர் கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்துள்ளனர்.

குலசேகரன்பட்டினம் ஞான மூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம் மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் ஏராள மான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இம்மாதம் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந் தருளி திருவீதி உலா சென்று பக்தர் களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

9-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு அபி ஷேக ஆராதனைகள் நடைபெற் றன. இரவில் அம்மன் அன்ன வாக னத்தில் கலைமகள் திருக்கோலத் தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

10 ம் திருநாளான இன்று (அக்.10) காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசு வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

11 ம் திருநாளான நாளை (அக்.11) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற் கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் நடக் கின்றன. அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோயி லுக்கு எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள், 3 மணிக்கு அம் மன் சிதம்பரேசுவரர் கோயில் அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனைகள் முடிந்து, திருத் தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பக்தர்கள் குவிகின்றனர்

இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வேடமணிந்து காணிக்கை வசூலித்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

தசரா விழா சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். தசரா விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.லெட்சுமணன், உதவி ஆணையர் மொ.அன்னக்கொடி, கோயில் நிர்வாக அதிகாரி ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in