

தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி கே.பழனி சாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் ஆகி யோருக்கு கொலை மிரட்டல் விடுத்து, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு குறுஞ் செய்தி வந்தது. அது தொடர்பாக பொறியியல் கல்லூரி மாணவர் உள்பட இருவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
சேலம் வருவாய் கோட்டாட் சியர் லீலாவதி. சேலம் வட்டாட் சியர் கண்ணன். இவர்களது மொபைல்போனுக்கு வெள்ளிக் கிழமை குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வந்தது. அதில், ‘தமிழக நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் இடைப் பாடி கே.பழனிச்சாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் ஆகியோரை, குறிப்பிட்ட சில தினங்களுக்குள் கொன்றுவிடு வோம். முடிந்தால் தடுத்துக் கொள் ளுங்கள்’ என குறிப்பிடப்பட் டிருந்தது. அதிகாரிகள் அதுகுறித்து, சேலம் மாநகர காவல் துறை ஆணை யரிடம் புகார் செய்தனர். ஆணையர் உத்தரவின்படி, தனிப்படை அமைக் கப்பட்டு விசாரணை நடத்தப் பட்டது. விசாரணையில், அக்குறுஞ் செய்தியை சேலம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அனுப்பியதாகத் தெரிய வந்தது. அங்கு சென்ற காவல் துறை யினர் சம்பந்தப்பட்ட நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ‘அச்சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை’ என, கூறியுள்ளார். எனினும், அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட சிம்கார்டு தர்மபுரியில் வாங்கப் பட்டது தெரியவந்தது. அதை யடுத்து அந்த எண் குறித்து விசாரணை நடத்தியதில், அந்த எண் பொறியியல் கல்லூரி மாணவர் எனத் தெரியவந்தது. அவரிடமும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கொலைமிரட்டல் சம்பவம் எதி ரொலியாக அமைச்சர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு, கூடுதல் பாது காப்புக்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.