

இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் இசைப் பயணத்தை பிரதிபலிக் கும் வகையில் பொதிகை தொலைக் காட்சியில் சனிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ‘குறையொன்று மில்லை’ என்ற நிகழ்ச்சி ஒளி பரப்பாகி வருகிறது. ‘தி இந்து’ நாளிதழுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.
இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 57-வது அத்தியாயத் தில் பாரதிய வித்யா பவன் நிறுவனர் கே.எம். முன்ஷியின் வேண்டு கோளுக்கு இணங்க எம்.எஸ்.சுப்பு லட்சுமி இசைத்துக் கொடுத்த 10 இந்திய மொழிகளின் பக்திப் பாடல்கள் தொகுப்பு இடம்பெறும். 1982-ம் ஆண்டு லண்டனில் நடை பெற்ற ‘பெஸ்டிவெல் ஆஃப் இந்தியா’ நிகழ்ச்சி பற்றியும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு தனிப் பெரும் கலைஞர் விருது வழங்கி கவுரவித்தது பற்றியும் சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெறும்.
இந்நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.