கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று பள்ளிப்பட்டுவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று பள்ளிப்பட்டுவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கொசஸ்தலை ஆற்றில் ஆந்திரா தடுப்பணை கட்டுவதை தடுக்க இரு மாநில முதல்வர்கள் சந்தித்து பேச வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

Published on

திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை தடுக்க இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் கொசஸ்தலை ஆற்றின்குறுக்கே இரு தடுப்பணைகள் கட்டஆந்திர அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் நேற்று பள்ளிப்பட்டுவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்அக்கட்சியின் தலைவர் அன்புமணி பேசியதாவது:

ஆந்திர அரசு, அணைகளை கட்டினால், கொசஸ்தலை ஆற்றில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர் வராது. அணை கட்ட வேண்டும் என்றால், கடைநிலை மாநிலத்தின் அனுமதிகளை பெற வேண்டும் என்ற சட்டத்தை மீறி ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆற்று படுக்கையில், 75 சதவீதம் தமிழகத்தில் இருப்பதால் தடுப்பணை கட்டஆந்திராவுக்கு உரிமை கிடையாது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை சந்தித்தோ அல்லது உச்ச நீதிமன்றம் சென்றோ இந்தத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பாமக மாநில துணை தலைவர் வைத்தியலிங்கம் மற்றும் மாநில நிர்வாகிகள் பாலயோகி, வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் விஜயன், தினேஷ் உட்படஏராளமானோர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in