தொழிலதிபர் கடத்தல் வழக்கில் கைதான மருத்துவர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததால் அரசு மருத்துவமனை கைதிகள் வார்டில் அனுமதி

தொழிலதிபர் கடத்தல் வழக்கில் கைதான மருத்துவர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததால் அரசு மருத்துவமனை கைதிகள் வார்டில் அனுமதி
Updated on
1 min read

சென்னை: தொழிலதிபர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர், நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததால், அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை தியாகராய நகர் ராமசாமி தெருவை சேர்ந்த தொழிலதிபர் சரவணன் (46) கடந்த 20-ம் தேதி வீடு புகுந்து காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியராஜ் (42), கோவையை சேர்ந்த சிறை காவலர் நாகேந்திரன் (31), கரூர் மாவட்டம் அரவிந்த்குரு(23), திருப்பூர் மாவட்ட கல்லூரி மாணவர் அப்ரோஸ்(23), மதுரை மாவட்டம் அஜய்(24), விஜயபாண்டி (25) ஆகிய 6 பேரை மாம்பலம் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பொம்மை துப்பாக்கி,கத்தி கைப்பற்றப்பட்டன.

சரவணன் தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக ஆரோக்கியராஜிடம் வாங்கிய ரூ.1 கோடிகடனை திருப்பித் தராமல் காலம்தாழ்த்தியதால், அவரை மிரட்டிகடத்தியுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்த கடத்தலுக்கு திட்டம் போட்டுக் கொடுத்தது, சரவணனுடன் பழக்கத்தில் இருந்த தோல் சிகிச்சை நிபுணரான மருத்துவர் அமிர்தா ஜூலியானா என்பதும், அவர் சென்னை கிழக்குகடற்கரை சாலையில் கிளினிக் நடத்தி வருவதும் தெரியவந்தது. இந்த வழக்கில் போலீஸார் தேடுவதை அறிந்து அவர் தலைமறைவானார்.

தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸார் நேற்று முன்தினம் அமிர்தாவை கைது செய்து, சைதாப்பேட்டை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, ராயப்பேட்டை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

முதலுதவி சிகிச்சைகள் முடிந்துமீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமிர்தாவை 15 நாள்நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற வேண்டும் என நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததன்பேரில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் அமிர்தா சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in