

காவல் துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் வழக்கு விவரங்களை ஒருங்கிணைக்கும் வலைப்பின்னல் திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காவல் நிலையங்களில் கொடுக் கும் புகார்களை பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கை விவரங் களை ஆன்லைனில் அறியும் வசதியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் பரிசோதனை அடிப் படையில் காஞ்சிபுரம் மாவட்டத் தில் முதலில் அமல்படுத்தப் பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால் காந்தி ஜெயந்தி தினமான நேற்று முதல் தமிழகம் முழுவதும் இத்திட்டம் அமல்படுத் தப்பட்டது. வழக்கு தொடர்பான விவரங்களை ஆன்லைனில் தினமும் பதிவு செய்வதற்காக கணினி பயிற்சி பெற்ற காவலர் ஒருவர் நியமனம் செய்யப்பட் டுள்ளார்.
மதுரையில் இத்திட்டத்தை மாநகர காவல் துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
இதுவரை முதல் தகவல் அறிக்கை உட்பட அனைத்து ஆவ ணங்களும் கையால் எழுதப்பட் டும், தட்டச்சு செய்தும் பயன்படுத் தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து முதல் தகவல் அறிக்கை மட்டும் கணிணியில் பதிவு செய்யப்படுகிறது.
தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு, மேல்முறையீடு தவிர்த்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தொடங்கி 5 கட்டங்கள் வரை கணிணியில் பதிவு செய்யும் திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டம் இந்தியாவில் தமிழ கத்தில்தான் முதல்முறையாக அமலுக்கு வருகிறது.
இத்திட்டத்தால் வழக்கு ஆவ ணங்களில் திருத்தம் செய்ய முடியாது. வழக்கு எண் (கிரைம் எண்) மட்டும் இருந்தால் புகார்தாரர்கள் தங்கள் வழக்கின் நிலையை தெரிந்துகொள்ள முடியும். காவல் நிலையங்களில் தினமும் பதிவாகும் வழக்குகளை உடனுக்குடன் பார்க்க முடியும் என்றார்.