

இறப்புச் சான்றிதழ் கேட்டவரிடம் ரூ.500 கேட்ட ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலக ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காங்கிரஸ் கட்சியின் செய லாளர் 8 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்.
ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் கிராமத்தைச் சேர்ந் தவர் பாஸ்கரன்(70). இவர் தற்போது சென்னை அடை யாறில் வசிக்கிறார். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயலா ளராகவும் உள்ளார்.
இவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது தந்தையின் இறப்புச் சான்றிதழ் கோரி ராமநாதபுரம் மாவட்டப் பதிவாளர் அலுவல கத்தில் விண்ணப்பித்துள்ளார். அங்கிருந்த பதிவரை எழுத்தர் ரூ.500 லஞ்சம் கேட்டதாகவும், பாஸ்கரன் தர மறுத்ததாகவும் கூறுகிறார்.
அதனால் அவருக்கு சான் றிதழ் வழங்காமல் பலமுறை அலைக்கழித்துள்ளனர். பின்னர் பாஸ்கரன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இறப்புச் சான்றிதழ் பெற்றார்.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் பணம் கேட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பதிவுத் துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்த வண்ணம் உள்ளார். அந்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காததால், அவ்வப்போது பத்திரப்பதிவு அலுவலகம் வந்து பொதுமக்களிடம் லஞ்சம் கொடுக் காதீர் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேற்று வந்து, லஞ்சம் கேட்ட உதவியாளர் மீது பலமுறை புகார் மனு அளித் தும், மாவட்டப் பதிவாளர் நட வடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை அங்கிருந்த பொது மக்களிடம் வழங்கினார்.
அதையடுத்து மாவட்டப் பதிவாளர் ரத்தினவேலை சந்தித்து மனு அளித்தார். மாவட்டப் பதிவாளர், தற்போது தான் எனது கவனத்துக்கு இப்புகார் வந்துள்ளது. புகார் மனுவை பதிவுத் துறை தலைவருக்குப் பரிந்துரைப்பதாகத் தெரிவித்தார்.
இது குறித்து பாஸ்கரன் கூறி யதாவது:
இறப்புச் சான்றிதழ் கோரிய என்னிடம் பதிவறை எழுத்தர் ஒருவர் ரூ.500 லஞ்சமாகக் கேட்டார். கொடுக்காததால் என்னைப் பலமுறை அலைக்கழித்து சான் றிதழ் வழங்கவில்லை. நான் நீதிமன்றத்தை அணுகி சான்றிதழ் பெற்றேன்.
அதையடுத்து கடந்த 8 ஆண்டுகளாக மாவட்டப் பதி வாளர் முதல் பதிவுத் துறை தலைவர், செயலாளர் வரை புகார் மனு அளித்து வருகிறேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராடுவேன் என்றார்.