Published : 30 Aug 2022 07:10 AM
Last Updated : 30 Aug 2022 07:10 AM

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் கல்விக் கட்டணம் குறைப்பு: பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியீடு

சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், 25 சதவீத இடத்தை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவருக்கான கல்விச்செலவை அரசே வழங்கும்.

அதன்படி, ஆண்டுதோறும்அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, தனியார் பள்ளிகளுக்கு2 தவணையாக அரசு வழங்குகிறது.

அந்த வகையில் 2020-21-ம்கல்வி ஆண்டில் எல்கேஜி, யுகேஜி மற்றும் முதல் வகுப்புக்கு ஒரு மாணவருக்கு ரூ.12,459, இரண்டாம்வகுப்பு ரூ.12,449, மூன்றாம் வகுப்புரூ.12,579, நான்காம் வகுப்புரூ.12,586, ஐந்தாம் வகுப்புரூ.12,831, ஆறாம் வகுப்பு ரூ.17,077,ஏழாம் வகுப்பு ரூ.17,107, எட்டாம்வகுப்பு ரூ.17,027 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2021-22-ம் கல்வி ஆண்டுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை குறித்த அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எல்கேஜி, யுகேஜிமுதல் 5-ம் வகுப்பு வரை ஒரு மாணவனுக்கு ஒரே கட்டணமாக ரூ.12,077 என்றும், 6 முதல் 8-ம்வகுப்பு வரை ஒரு மாணவனுக்கு ஒரே கட்டணமாக ரூ.15,711 என்றும் நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.17 ஆயிரத்துக்கும் மேல் கடந்தஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது இதுரூ.15,711 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, எல்கேஜி முதல்5-ம் வகுப்பு வரையிலான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம், குறித்த நேரத்தில் தரப்படுவதில்லை என தெரிவித்துவரும் தனியார் பள்ளி நிர்வாகங்கள், இந்த கட்டணக் குறைப்பால் அதிர்ச்சியடைந்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x