

தமிழக பாஜக சார்பில், அக்கட்சி யின் இரு நாள் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று தொடங்கியது.
கூட்டத்துக்கு, மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், நரேந்திரன், சரவண பெருமாள், முருகானந்தம் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது:
சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்கப் போவதில்லை என்று பிரதமர் மோடி எடுத்த முடிவினால், பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு ரத்து செய்யப்பட்டு விட்டது. பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முடிவு சரியாகவே இருக் கும் என்பதை, பிற நாடுகளும் நம்புகின்றன. இது பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக் கும் பொருந்தும் என்றார்.
முன்னதாக, அவர் திருப்பூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரி யத்தை சட்ட விதிகளுக்கு உட் பட்டு, தற்போது அமைக்க முடி யாது என்று தெரிவித்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தமிழக கட்சிகள் அரசியல் செய்து கொண்டி ருக்கிறார்கள். பாஜக நடுநிலை யோடு செயல்படுகிறது.
ஆனால், காவிரிக்காக தற்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சி, அவர்களது ஆட்சியின் போது தெளிவாக திட்டமிட்டிருந் தால் காவிரி மேலாண்மை வாரி யத்தை அமைத்திருக்கலாம். திட்ட மிடாததால், இன்று அதை அமைக்க முடியாமல்போய் உள்ளது. பாஜக சார்பில், இந்த விவகாரத்தில் உயர் நிலை தொழில்நுட்பக் குழு அமைக் கப்பட்டுள்ளது. அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
இதில் தமிழக மக்களுக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கும். தமிழகத்தில் அரிவாள் கலாசாரம் போய், துப்பாக்கி கலாசாரம் வந்துள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்றார்.