வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை வாய்ப்பு
Updated on
1 min read

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: ஆந்திர வடக்கு கடலோரப் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து வருகிறது. அதனால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு குறைவுதான். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில், வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, பகல் நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காரணப்படும். ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in