

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூரை அடுத்த ராஜபட் டணத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் வெங்கடேஷ்(28). இவரது மனைவி இந்து(23). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன இவர்களுக்கு சுபாஷினி(1) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், கர்ப் பிணியாக இருந்த இந்துவுக்கு கடந்த 24-ம் தேதி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று நண்பகல் 12 மணி யளவில் இந்துவுடன் இருந்த அவரது தாய் லட்சுமி, மகளின் ரத்தப் பரிசோதனை அறிக்கையை வாங்க வெளியில் சென்றிருந்தார். கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்ப வார்டுக்கு வந்தபோது, படுக்கையில் இருந்த குழந்தை காணாமல்போனது கண்டு அதிர்ச் சியடைந்த இந்து, கூச்சலிட்டு அழுதார். குழந்தை காணாமல் போன தகவல் அறிந்ததும் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் ரவீந்தரன், இன்ஸ்பெக்டர்கள் வின்சென்ட், குமரேசன், மருத்துவமனை டீன் கனகராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். பிரசவ வார்டின் வெளியிலும், நுழைவாயில் பகுதி யிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன.
அதன் பதிவுகளை போலீஸார் மற்றும் மருத்துவமனை ஊழியர் கள் பார்வையிட்டனர். 30 நிமிட தேடலுக்குப் பிறகு பகல் 12.44 மணிக்கு கர்ப்பிணி போன்ற தோற்றத்தில் வந்த பெண், இந்துவின் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியில் செல்வது சிசிடிவியில் பதிவாகியிருப்பது கண்டிபிடிக்கப்பட்டது.
இதனிடையே, குழந்தையை அந்தப் பெண் தூக்கிச் செல்லும் முன்பாக, சுடிதார் அணிந்த இளம்பெண் அந்த வளாகத்தில் சந்தேகப்படும்படி நடமாடியதும் தெரியவந்தது. குழந்தையின் தாய் கழிப்பறைக்கு செல்வதை நோட்டமிட்டு, பின்னர் குழந்தையை கடத்திச் செல்ல சுடிதார் அணிந்த பெண் உதவியிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
பிரசவ வார்டில் வைக்கப் பட்டுள்ள கண்காணிப்பு கேமரா தரம் குறைந்தவையாக இருந்ததால், காட்சிகள் தெளிவில்லாமல் இருந்தது. இதையடுத்து போலீஸார், மருத்துவனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள சுழல் கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகியிருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.