

கொடைக்கானல்: கொடைக்கானலில் காலையில் மிதமான வெயில், பிற்பகலுக்குப் பிறகு குளிர் என காலநிலை இதமாக உள்ளதால் வார விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
நேற்று காலை முதலே அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, துாண் பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்தனர்.
ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரையில் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மிதமான வெயில், பனிமூட்டம், அவ்வப்போது சாரல் என மாறி, மாறி நிலவிய தட்பவெப்ப நிலையை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனர்.
பல இடங்களில் சுற்றுலா வாகனங்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது. வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே நகராட்சி சுங்கச் சாவடியில் வாகனங்கள் வரிசையாகக் காத்திருந்தன.