பேசின் பாலத்தில் இருந்து கூவத்தில் கவிழ்ந்த லாரி: தூக்க கலக்கத்தில் இருந்ததாக ஓட்டுநர் வாக்குமூலம்

பேசின் பாலத்தில் இருந்து கூவத்தில் கவிழ்ந்த லாரி: தூக்க கலக்கத்தில் இருந்ததாக ஓட்டுநர் வாக்குமூலம்
Updated on
1 min read

சென்னை மாதவரத்தில் இருந்து துறைமுகம் நோக்கி நேற்று முன்தினம் அதிகாலை ஒரு டிப்பர் லாரி சென்றது. பேசின் பாலத்தில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கூவம் ஆற்றில் தலைகுப்புற கவிழந்தது. இதில், லாரியில் இருந்த கிளீனர் கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ் (18) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன. லாரியின் உரிமையாளர் பொன்னேரியை சேர்ந்த சலீம். அவரிடம் நடத்திய விசாரணையில், வியாசர்பாடி முல்லை நகர் எம்.ஜி.ஆர்.நகர் 5-வது தெருவை சேர்ந்த பார்த்திபன் என்பவர்தான் லாரியின் ஓட்டுநராக இருந்தார் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து பார்த்திபனை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ‘மதுரவாயலில் இருந்து சரக்குகளை லாரியில் ஏற்றி அதை மாதவரத்தில் உள்ள கிடங்கில் இறக்கினேன். பின்னர் சரக்குகளை ஏற்ற சென்னை துறைமுகத்துக்கு சென்றுகொண்டு இருந்தேன். எனக்கு தூக்கம் வந்தது. அதை பொருட்படுத்தாமல் லாரியை ஓட்டினேன். திடீரென எனது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி கூவம் ஆற்றில் கவிழ்ந்தது. நான் தப்பித்து விட்டேன்.

ஆனால் கிளீனர் பிரகாஷ் தூங்கிக் கொண்டிருந்ததால் லாரிக்குள் சிக்கி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், யாரிடமும் சொல்லாமல் வீட் டுக்கு வந்துவிட்டேன். வீட்டில் இருந்த என்னை போலீஸார் பிடித்துவிட்டனர்’ என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி கூவம் ஆற்றில் கவிழ்ந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in