

கீழணையில் இருந்து கொள்ளிடத் தில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளி டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் உபரி தண்ணீர் விநா டிக்கு சுமார் 1.20 லட்சம் கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரி, கொள்ளி டத்தில் விடப்பட்டுள்ளது.
இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கீழணைக்கு விநாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கு அதிகமாக தண்ணீர் வரும் என்று கருதி நீர்வளத்துறை அதிகாரிகள் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை தண்ணீர் திறந்துள்ளனர்.
தற்போது விநாடிக்கு 71 ஆயிரத்து 652 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல் கடந்த 3-ம் தேதி விநாடிக்கு 29 ஆயிரம் கன அடி தண்ணீர் கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டது.
இது படிப்படியாக உயர்ந்து அதிகப்பட்சமாக விநாடிக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தண்ணீர் வெளியேற்றுவது கடந்த 19-ம்தேதி இரவு நிறுத்தப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் மேட்டூர் அணை யில் உபரி தண்ணீர் 1 லட்சத்து 20 கன அடி திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் அதிகப் பட்சமாக விநாடிக்கு 1 லட்சத்து 50 கன அடி வரை வெள்ளநீர் வர வாய்ப்புள்ளதால் கொள்ளிடம் கரையோரம் மற்றும் அதனை சுற்றி தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும், கொள்ளிட்டம் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, புகைப்படம், எடுக்கவோ வேண்டாம் என்று கொள்ளிடம் வடி நிலக் கோட்ட சிதம்பரம் நீர்வளத்துறை செயற் பொறியாளர் காந்தரூபன் தெரி வித்துள்ளார்.
இந்நிலையில் கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வரு வாய்த்துறையினர் வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக் களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.