12 தலைமை பொறியாளர்கள் பணியிடங்கள் காலி: தமிழக பொதுப்பணித் துறையில் நிர்வாகம் ஸ்தம்பிப்பு - விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு புகார்

12 தலைமை பொறியாளர்கள் பணியிடங்கள் காலி: தமிழக பொதுப்பணித் துறையில் நிர்வாகம் ஸ்தம்பிப்பு - விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு புகார்
Updated on
1 min read

முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளதால் தமிழக பொதுப்பணித் துறை நிர்வாகம் முடங்கும் அபாயம் உள்ளது என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு, சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் மேட்டூர் அணையில் இருக்கிற தண் ணீரை பகிர்ந்தளிப்பதில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டு, திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரை விளைநிலங்களைச் சென்றடைய வில்லை. சுமார் 18 லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் இல்லாமல் விதைகள் முளைப்புத் திறனை இழந்துள்ளதால் விவசாயிகள், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உயர்மட்டக் குழு ஆய்வு

இந்நிலையில் உச்ச நீதிமன் றத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட் டுள்ள மத்திய அரசின் உயர்மட்டக் குழு 9, 10-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களைப் பார்வையிட உள்ளது.

மேட்டூரில் இருந்து வங்கக் கடலில் கலக்கும்வரை காவிரி நீர் குறித்த முழு நிர்வாக அதிகாரம் பொதுப்பணித் துறை திருச்சி தலைமைப் பொறியாளர் கட்டுப் பாட்டின்கீழ் வருகிறது. ஆனால், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தலைமைப் பொறியாளர் பணியிடம் கடந்த 6 மாதமாக காலியாக உள்ளது. அதேபோல தஞ்சாவூர் காவிரி செயற்பொறி யாளர் பணியிடமும் காலியாக உள்ளது.

தமிழ்நாட்டில், பொதுப்பணித் துறையில் 16 தலைமை பொறி யாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 4 தலைமை பொறியாளர் கள் மட்டுமே பணியில் உள்ளனர். கட்டுமானத்துக்கான திருச்சி தலைமைப் பொறியாளர்தான் காவிரி பாசனத்துக்கான பொறுப் பையும் வகிக்கிறார். இவர் மேலும் 4 பொறுப்புகளை கூடுதலாகக் கவனிக்கிறார். தலைமைச் செயல கத்தில் பொதுப்பணித் துறைக்கு உரித்தான பொறுப்பும் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்படி ஒட்டுமொத்தமாக தமி ழகத்தில் பொதுப்பணித் துறை முடங்கியுள்ளது. நிர்வாக அதிகாரம் முழுமையும் ஸ்தம்பித் துள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக பொதுப்பணித் துறை திருச்சி தலைமைப் பொறியாளர், செயற்பொறியாளர் காலியிடங்களை நிரப்பாவிட்டால் டெல்டாவில், இருக்கிற தண் ணீரைக் கொண்டு சாகுபடிப் பணி களை மேற்கொள்ள முடியாமல் போகும். பொதுப்பணித் துறை நிர்வாகமும் முடங்கும் அபாயம் உள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in