Published : 04 Oct 2016 08:44 AM
Last Updated : 04 Oct 2016 08:44 AM

ஐபிபிஎஸ் புரபேஷனரி அதிகாரி தேர்வுக்கு பயிற்சி: ரேஸ் - ‘தி இந்து’ தமிழ் இணைந்து நடத்தும் இலவச ஆன்லைன் தேர்வுகள்

சென்னை தி.நகரை தலைமையிட மாக கொண்ட ரேஸ் வங்கித் தேர்வு பயிற்சி மையம் மற்றும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘வெற்றிக்கொடி’ இணைந்து வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நடத்தும் புரபேஷனரி அதிகாரி தேர்வுக்கான 5 முதல் நிலை ஆன்லைன் தேர்வுகளை இலவசமாக வழங்கவுள்ளது.

தற்போது அனைத்து வங்கித் தேர்வுகளும் ஆன்லைன் மயமாகி விட்ட நிலையில் முதன்முதலாக ஆன்லைன் தேர்வுகளை எழுதும் மாணவர்கள், போதிய அளவு திறமை இருப்பினும், போதிய அனு பவம் இல்லாத காரணத்தாலும், தேர்வு பதற்றத்தின் காரணமாக வும் வெற்றி வாய்ப்பைத் தவற விடுகின்றனர். ஆன்லைனில் தேர்வு எழுதி பயிற்சி பெறுவதன் மூலமாக இத்தகைய பின்னடைவுகளை தவிர்க்கலாம்.

இந்தியா முழுவதும் ஏறத்தாழ ஒரு கோடி மாணவர்கள் ஐபிபிஎஸ் பிஓ- 2016 தேர்வு எழுதவுள்ள நிலையில் சென்னை ரேஸ் பயிற்சி மையம் அறிவித்துள்ள இந்த ஆன்லைன் பயிற்சித் தேர்வானது மாணவர்களின் பதிலளிக்கும் வேகம் மற்றும் துல்லியம் போன்ற வற்றின் தரத்தை நிர்ணயிக்கும் அம்சமாக உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பயிற்சியின் வேகத்தையும், தரத்தையும் உயர்த்தமுடியும்.

இந்த மாதிரித் தேர்வுக்கான வினாக்கள், பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களின் தேர்வு களுக்கு வினாத்தாள்களை வடி வமைத்த அனுபவம் வாய்ந் தவர்களால் வடிவமைக்கப் பட்டுள்ளது. வங்கித் தேர்வுகளில் உள்ளவாறே நெகட்டிவ் மார்க் இருப்பதால், ஒரு உண்மையான வங்கித் தேர்வை எழுதிய அனுபவம் கிடைக்கும்.

தேர்வெழுதி முடித்த உட னேயே, மாணவர்கள் அவர்களின் மதிப்பெண்களை அறிந்துகொள் வதோடு, அனைத்து வினாக்களுக் கான விளக்கங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் ஆய் வறிக்கை தரப்படுகிறது.

இத்தேர்வுகளை நாளை முதல் 5 நாட்களுக்கு (அக்டோபர் 5-9) http://onlinetest.raceinstitute.in/ என்ற இணையதள முகவரியில், முகநூல் அல்லது கூகுள் பிளஸ் முகவரி வழியாக உள்நுழைவதின் மூலம் இலவசமாக எழுதலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x