

திருச்சி அருகே 8 பேரை கொலை செய்த சப்பாணியிடம் விசாரிப்ப தற்கு மேலும் 3 நாள் போலீ ஸாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும் பூர் அருகேயுள்ள வேங்கூர் நடுத் தெருவைச் சேர்ந்த முத்தையன் மகன் தங்கதுரை (34). கடந்த 7-ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. 13-ம் தேதி கிருஷ்ணசமுத்திரம் பகுதி யிலுள்ள வாய்க்காலில் தங்கதுரை உடல் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கதுரையின் செல்போனை பயன்படுத்திய அவரது நண்பரான கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சப்பாணியை (35) பிடித்து விசாரித்தனர். அப்போது, நகைக்கு ஆசைப்பட்டு தங்கதுரையைக் கொலை செய்ததை சப்பாணி ஒப்புக்கொண்டார். அத்துடன், தன் தந்தை தெக்கன் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து திருச்சி நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 30-ம் தேதியன்று சப்பாணியை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அதைத் தொடர்ந்து கிருஷ்ணசமுத்திரம் பகுதியில், அவர் அடையாளம் காட்டிய இடங்களிலிருந்து 5 பேரின் உடல் பாகங்கள் மீட்கப் பட்டன. அற்புதசாமி, பெரியசாமி ஆகியோரின் உடல் பாகங் களைக் கண்டறிய முடியவில்லை. இதற்கிடையே, நீதிமன்றம் அளித்த காலக்கெடு முடிவடைந்த தால், போலீஸார் சப்பாணியை நேற்று திருச்சி ஜே.எம்.-6 நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஷகிலா, மேலும் 3 நாட்கள் சப்பாணியிடம் விசாரணை நடத்த போலீஸாருக்கு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “பெரியசாமி, அற்புதசாமி ஆகியோரின் உடல் பாகங்களை மீட்க வேண்டியுள்ளது.
மேலும், தொடர் கொலைகள் தொடர்பாக சப்பாணியிடம் விரிவான விசா ரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால், அதற்காக நீதிமன்றம் 3 நாள் அனுமதி கொடுத்துள்ளது. எனவே, இன்று (அக்.4) சப்பாணியை அழைத்துச் சென்று தேட உள்ளோம்” என்றனர்.