கோவை குண்டு வெடிப்பு கைதி உடல்நலக் குறைவால் மரணம்: மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள்

கோவை குண்டு வெடிப்பு கைதி உடல்நலக் குறைவால் மரணம்: மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள்
Updated on
1 min read

கோவை கரும்புக்கடை திப்பு நகரைச் சேர்ந்தவர் அப்துல் ஓசீர்(45). கடந்த 1998-ல் கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட இவருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து 2007-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

கடந்த ஒரு வாரமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரை, கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில், கோவை சிறையில் இருந்த அப்துல் ஓசீருக்கு நேற்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அப்துல் ஓசீர் இறந்த தகவலை யறிந்த அவரது உறவினர்கள், அரசு மருத்துவமனையில் திரண் டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து, மாநகர காவல் துணை ஆணையர் லஷ்மி தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்துல் ஓசீரின் உறவினர்கள் கூறும்போது, “உடல்நலம் பாதித்த அப்துல் ஓசீருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. அவருக்கு ஸ்கேன் செய்ய வேண்டும் என மருத்துவமனையில் கூறியுள்ள னர். ஆனால், சிறை அதிகாரி களிடம் அனுமதி பெற வேண்டும் என கூறி, ஸ்கேன் செய்யாமலேயே அழைத்துச் சென்றுவிட்டனர். அவரை பரிசோதித்து, உரிய சிகிச்சை அளித்திருந்தால், காப்பாற்றியிருக்கலாம். சிறைத் துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே, அவர் இறந்ததற்குக் காரணம்” என்றனர்.

இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. உறவினர்களின் புகார் தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in