தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தல்: பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தல்: பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

Published on

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, நிவாரண நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேட்டூர் அணையில் காவிரி உயர் தொழில்நுட்பக் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குழுவினரிடம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் உள்ளிட்ட விவசாய அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர். மனு குறித்து பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றரை மாதத்துக்கு முன்னர் 18 லட்சம் ஏக்கரில் விதைக்கப்பட்ட நெல் நாற்று கருகும் நிலையில் உள்ளன. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் குறைவாக இருப்பதால் கடைமடை வரை நீர் வருவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, தமிழகத்துக்கு 100 டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு நிபுணர் குழுவை அமைத்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது. இதன் மூலமாக தமிழகத்துக்கு நிச்சயம் நல்லது நடக்கும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும். இம்முறையும் நியாயம் கிடைக்காவிட்டால், நாட் டின் இறையாண்மைக்கு ஆபத்து நேரிடும் என்று அச்சம் ஏற்படுகிறது.

காவிரியை நம்பியுள்ள 25 மாவட்டங்களில் வறட்சி, முல்லை பெரியாறு அணையிலும் போதிய நீர் இல்லாதது, பாலாற்றில் தடுப்பணை என தமிழகம் முழுவதும் வறண்டு கிடப்பதால், வறட்சி பாதித்த மாநிலமாக தமிழ கத்தை அரசு அறிவிக்க வேண்டும். மேலும், வறட்சி நிவாரண பணிகளை உடனே தொடங்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in