

மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சையில் வரும் 7-ம் தேதி நடக்கவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி யின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
காவிரி மேலாண்மை வாரி யத்தை உடனடியாக அமைக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்துக்கு எதிராக செயல்பட நினைக்கும் பாஜகவை தமிழக மக்கள் தமிழகத்தில் இருந்து விரைவில் துடைத்து எறிவார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் அதன் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் வரும் 7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அப்போராட்டத்துக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. அந்தப் போராட்டத்தில் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை தலைவர் ஆர்.தேவராஜன் தலைமையில் கொமதேகவினர் கலந்துகொள்வார்கள்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.