

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாங்காடு பேரூ ராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் வெள்ளத் தடுப்பு குறித்து எடுக் கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோ சனைக் கூட்டம் நேற்று நடைபெற் றது. இதில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர், பொதுமக்கள், வியா பாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பல்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா தலைமை தாங்கி னார். அப்போது அவர் கூறும் போது, ‘வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பேரூ ராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதி களிலும் மழைநீர் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு, மழைநீர் செல்லும் வழித்தடங்களில் உள்ள செடிகள், முட்புதர்களும் அகற்றப்பட்டு வருகிறது. தயார் நிலையில் பேரூராட்சி நிர்வாகம் உள்ளது. மணல் முட்டைகள், ஜெனரேட்டார், டீசல் மோட்டார், படகு, புல்டோசர், சாலையோரத்தில் உள்ள ஆபத்தான மரங்கள், மின் கம்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை மூலம் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டது.
மழை நேரத்தில் வெள்ள பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருப்பவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளான உடைகள், அடுப்பு மற்றும் சமையல் பொருட்களை முதல் மாடியில் கொண்டு சென்று வைத்துக் கொள்ளவும், தாழ்வான குடியிருப்புகளில் உள்ள மின் மோட்டார்களைச் சற்று இடம் மாற்றி மேடான பகுதிகளில் அமைத்துக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மழையால் பெரிதும் பாதிக்கப்படும் குடும்பங்களில் வசிப்பவர்களைப் பாதுகாப்பாக அரசு பள்ளிகள் மற்றும் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட வர்கள் சில ஆலோசனைகளைத் தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்தக் கூட்டத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.