

ஒரு வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுபலட்சுமி. இவர்களுக்கு லிங்கேஸ்வரன் என்ற மகனும், ஒரு வயதில் நிக்கிதா என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணத்தால் கணவரை பிரிந்த சுபலட்சுமி கடந்த 6 மாதமாக அபிராமபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை பூபாலன் மனைவியை சமாதானம் செய்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்து கொண் டிருந்தார். ஆட்டோவில் குழந்தை நிக்கிதாவும் இருந்தது. ராஜா அண்ணாமலைபுரம் விசாலாட்சித் தோட்டம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது ஆட்டோ விலேயே கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த பூபாலன் குழந்தை நிக்கிதாவின் கழுத்தை நெரித்துள்ளார். குழந்தை மயங்கி யுள்ளது. இதையடுத்து அபிராம புரம் காவல் நிலையத்துக்குச் சென்ற பூபாலன் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த போலீஸார் வீட்டிற்கு சென்று பார்த்த போது, குழந்தை மயக்க நிலையில் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீஸார் குழந்தையை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக பூபாலனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.