

கொடைக்கானல் மலைப்பகுதியில் காரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். நடிகர் பாபிசிம்ஹாவின் சகோதரர் படுகாயமடைந்து தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடைக்கானலுக்கு சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்றுள்ளனர். எதிரே இருசக்கர வாகனத்தில் நடிகர் பாபிசிம்ஹாவின் அண்ணன் லெனின் பிரசாத்(37), அவரது நண்பர் ஹக்கீம்(32) ஆகியோர் சென்றுள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதி பெருமாள் கோயில் அருகே பேத்துப்பாறை என்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் படுகாயமடைந்தனர். இவர்களில் ஹக்கீம் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். லெனின் பிரசாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
காரில் வந்தவர்கள் குடிபோதை யில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கொடைக்கானல் போலீஸார் காரில் வந்த ஐந்து பேரையும் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.