கரும்பு நிலுவைத் தொகை கோரி போராட்டம்: விவசாயிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை

கரும்பு நிலுவைத் தொகை கோரி போராட்டம்: விவசாயிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை
Updated on
1 min read

கரும்புக்கான நிலுவைத் தொகை பெற்றுத் தருவது தொடர்பாக விவ சாய சங்க பிரதிநிதிகளுடன் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற் றும் அதிகாரிகள் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

சர்க்கரை ஆலைகள் தரவேண் டிய நிலுவைத் தொகையை கேட்டு தமிழக கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் சங்கங் களை தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.

அதன்படி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத் தலைவர் கே.பால கிருஷ்ணன் தலைமையில் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் என்.பழனிசாமி உள்ளிட்டோர் நேற்று தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் சர்க்கரைத் துறை ஆணையரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அமைச்சரிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இயங்கி வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 2 பொதுத்துறை ஆலைகள் கடந்த 2015-16 அரவை பருவத்தில், விவ சாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்கு ரூ.300 கோடிக்கு மேல் வழங்காமல் உள்ளன. அந்த நிலு வைத் தொகையை விவசாயி களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந் துரை விலையை தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வில்லை. அந்த வகையில் ரூ.1,100 கோடியை தனியார் ஆலைகள் நிலுவை வைத்துள்ளன. மாநில அரசு நடவடிக்கை எடுத்து, தனியார் ஆலைகள் தரவேண்டிய நிலுவைத்தொகை முழுவதையும் பெற்றுத்தர வேண்டும்.

டன்னுக்கு ரூ. 4 ஆயிரம்

மேலும், 2016-17 பருவ கரும்புக்கு பரிந்துரை விலையாக டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க கரும்பு ஆலைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை தொடர்பாக, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘கூட்டுறவு, தனியார் ஆலைகள் மத்திய, மாநில அரசு பரிந்துரை விலைகளை கரும்பு விவசாயிகளுக்கு வழங்காததை எடுத்துக் கூறினோம். இதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், உடனடி யாக சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரை விலையை வழங்காத ஆலைகள் மீது வருவாய் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலுவைத்தொகை பெற்றுத் தரப்படும் என சர்க்கரைத்துறை ஆணையர் உறுதி அளித்துள்ளார். கூட்டுறவு ஆலைகளில் உள்ள நிலுவைத்தொகை மற்றும் தனியார் ஆலை நிலுவைத்தொகையில் தீபாவளிக்கு முன்பு முடிந்த வரையில் பெற்றுத் தருவதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இல்லாவிட்டால் நாங்கள் மீண்டும் ஆலைகளில் போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித் துள்ளோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in