இந்திய கடலோர காவல்படை சார்பில் கடல்சார் தேடுதல், மீட்பு பயிற்சி - சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது

இந்திய கடலோர காவல்படை சார்பில் கடல்சார் தேடுதல், மீட்பு பயிற்சி - சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது
Updated on
1 min read

சென்னை: இந்திய கடலோர காவல்படை சார்பில் தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சி சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது.

இந்திய கடலோர காவல்படை சார்பில் 10-வது தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சி சென்னையில் 2 நாட்கள் நடக் கிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

கடல்சார் பயணியர் பாதுகாப்பு

இந்த நிகழ்ச்சியை ராணுவத் துறை செயலர் அஜய்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த பயிற்சிகடல்சார் பயணியரை பாதுகாப்பதற்கான திறன் மேம்படுத்தவே நடைபெறுகிறது.

அந்தவகையில், சமீபத்தில் கடலில் தத்தளித்த வங்கதேசத்தை சேர்ந்த 32 மீனவர்களை, இந்திய கடலோர காவல் படை யினர் மீட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். சர்வதேச கடல் பாதுகாப்பு பங்குதாரராக இந்தியா இருக்கிறது. அந்தவகையில், 40 சதவீத கன்டெய்னர்கள் மற்றும் டேங்கர்கள் இந்திய கடலோர எல்லை அருகே தான் கொண்டு செல்லப்படுகிறது.எனவே இந்திய கடலோர காவல்படையின் பங்களிப்பு மிக முக்கியமானது’ என்றார்.

செய்முறை விளக்கங்கள்

கடலில் தத்தளிப்பவர்களை மீட்பது, கப்பலில் ஏற்படும் தீ விபத்தை அணைப்பது, எதிர்பாராத விபத்தால் கடலில் காணாமல் போனவர்களை தேடுவது போன்ற நிகழ்வுகளில், கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் வாயிலாக செய்முறை விளக்கங்களை வீரர்கள் செய்து காண்பிப்பார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in