Published : 24 Oct 2016 09:54 AM
Last Updated : 24 Oct 2016 09:54 AM

ராமானுஜர் 1,000-வது ஆண்டு வைணவ மாநாடு: 7 பேருக்கு உடையவர் திருவடிகள் விருது

தஞ்சாவூரில் ராமானுஜரின் 1,000-வது ஆண்டை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வைணவ மாநாட்டில் 7 பேருக்கு உடையவர் திருவடிகள் விருது வழங்கப்பட்டது.

ராமானுஜரின் 1,000-வது ஆண்டை முன்னிட்டு எஸ்.என்.இ.டி. வைணவ இளைஞர் அமைப்பு சார்பில் 14-வது வைணவ மாநாடு தஞ்சாவூர் மேலவீதி காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு, மதுபயதே நம்பிள்ளை ராமானுஜ தேசிகன் சுவாமி தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார். சம்பத் பட்டாச் சாரியார், வெங்கடேச ராமானுஜ தேசிகதாசர், ஸ்ரீபிள்ளை நரசிம்ம பிரியர், சடகோபன் தர் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில், ராமானுஜ தர்சன சபையைச் சேர்ந்த ஆராவமுதன் ராமானுஜதாசர், சவுராஷ்டிர சபை யைச் சேர்ந்த அனந்தராம ராமானுஜ தேசிகதாசர், திருக்கண்டியூர் குலசேகர ராமானுஜதாசர், முகுந்த ராமானுஜதாசர், புருஷோத்தம ராமானுஜ தேசிகதாசர், ராஜ மகேந்திரன் ராமானுஜதாசர், பாபு ராமானுஜதாசர் ஆகிய 7 பேருக்கு உடையவர் திருவடிகள் விருது வழங்கப்பட்டது.

முன்னதாக, பஜனை வீதியுலா தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் இருந்து தொடங்கி, மாநாட்டு மண்டபத்தை அடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x