

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தொரப்பள்ளியில் அமைந்துள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.கலாவதி. இப்பள்ளியில் 142 பேர் படிக்கின்றனர். அதில், 70 பேர் பழங்குடியினர். இவர்கள், கூடலூரை ஒட்டியுள்ள நெல்லிக் கரை, புத்தூர்வயல், நரிமூலா, இடுவயல், மோலப்பள்ளி, குளியன் சாலை கிராமங்களைச் சேர்ந்தவர் கள்.
நீலகிரி மாவட்டத்தில் நகரங்கள் அருகே வசிக்கும் கோத்தர், தோடர் பழங்குடியினர் ஓரளவு கல்வி பெற்று மத்திய, மாநில அரசுப் பணிகளில் உள்ளனர். இருளர், குரும்பர் இனத் தவரிலும் கணிசமானோர் கல்வி பெறுகின்றனர். இதில் மிகவும் பின்தங்கி உள்ளவர்கள் பனியர் கள். இவர்கள், கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தோட்டத் தொழி லாளர்களாக உள்ளனர்.
கணவன், மனைவி இருவரும் பணிபுரியச் சென்றுவிடுகின்றனர். பெற்றோருக்குக் கல்வி இல்லாத தால், குழந்தைகளின் கல்வி மீது அவர்களுக்கு ஆர்வம் இருப்ப தில்லை. பனியர்கள் எளிதில் யாரு டனும் பழகாததால், பள்ளிக்குக் குழந்தைகள் வருவதில் சிக்கல் உள்ளது. இதனை, தனது முயற்சி யால் தீர்த்து வருகிறார் தலைமை ஆசிரியை கலாவதி.
இது தொடர்பாக அவர் கூறிய தாவது: அறிமுகம் இல்லாதவர் களைப் பனியர்கள் நம்புவதில்லை. நம்பிக்கை பெற, அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். தொடர் முயற்சிக்குப் பின்னரே என்மீது நம்பிக்கை ஏற்பட்டு, தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். அனை வருக்கும் கல்வி இயக்கம் மூல மாக நியமிக்கப்பட்டுள்ள பாது காவலர்களுடன் குழந்தைகள் வராத தால், நானே தினமும் அவர் களது வீடுகளுக்குச் சென்று பள்ளிக்கு அழைத்து வருகிறேன். இதனால் எனக்கு சில சிரமங்கள் ஏற்பட்டாலும் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கிறதே என்பதால் அதை ஒரு பொருட்டாக நினைப் பதில்லை.
கல்வி மட்டுமே வாழ்க்கையை மேம்படுத்தும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அருகே உள்ள கார்குடி பள்ளிக்கு அனுப்பப் படுகின்றனர். கல்வியில் நாட்டம் இல்லாமல் உள்ள மாணவர்களை, உப்பட்டியில் உள்ள ஐடிஐ-யில் தொழிற்கல்வி கற்க ஏற்பாடு செய் யப்படுகிறது.
பழங்குடியினரிடம் இருந்த தயக் கத்தைப் போக்க, ‘நண்பர்களைப் பள்ளிக்கு அனுப்புவோம்’ என்ற பேரணி நடத்தப்பட்டுள்ளது. மாண வர்களுக்கு விலங்குகள் போன்ற முகமூடிகளை அணிவித்து பழங்குடியினரை ஈர்த்துள்ளோம்.
பழங்குடியினர் கிராமத்துக்குச் சென்று, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தும் தலைமை ஆசிரியை.
சட்ட விழிப்புணர்வு முகாம், பெண்களுக்கு எதிரான வன் கொடுமை குறித்து மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோருக்கும் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகி றது. வறுமையின் பிடியில் உள்ள இத்தகைய மாணவர்களுக்கு, உற வினர்களிடம் இருந்து உடைகளை சேகரித்து வழங்குகிறேன். தேடல் இருந்தால்தான் அடுத்தகட்டத் துக்குச் செல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழங்குடியினர் கல்வி பெற உறுதுணையாக விளங்குவதால், இவரது சேவையைப் பாராட்டி மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரி யர் விருதுகள் வழங்கியுள்ளன.