

தமிழகத்தில் பயங்கரவாதம் அதி கரித்துள்ளதாகவும், இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் தீவிர வாதிகள், தீவிரவாத இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கு மாறும் மத்திய உள்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங்கிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் கேட்டுக்கொண்டார்.
‘தமிழகத்தில் இந்து அமைப்பு களின் நிர்வாகிகள் கொலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண் டும்’ என தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்து இயக்க நிர்வாகிகள் கொலை வழக்குகளை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் (என்ஐஏ) ஒப் படைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் கடந்த வாரம் மனு அளித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் மத் திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இதுபற்றி ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, விஎச்பி போன்ற இந்து அமைப்பு களின் நிர்வாகிகள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார், ஓசூரில் விஎச்பி நிர்வாகி சூரி ஆகியோர் கடந்த ஒரு மாதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் பாஜக தலை வர் போஸின் கார், மாவட்ட பாஜக அலுவலகம் பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது. சென்னையில் ஆர்எஸ்எஸ் செயலாளர் நரஹரி, திண்டுக்கல்லில் இந்து முன்னணி நிர்வாகி சங்கர் கணேஷ் ஆகியோர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலூர், திருப்பூரில் இந்து இயக்க நிர்வாகிகளின் வீடுகள், அலுவல கங்கள், தொழில் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விரிவாக எடுத்துக் கூறினேன். இந்து இயக்க நிர்வாகிகள் மீதான தாக்கு தல்கள் அனைத்தும் தீவிரவாதி களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதை விளக்கினேன். தமிழகத்தில் அதி கரிக்கும் தீவிரவாதத்தைக் கட்டுப் படுத்தும் வகையில், தீவிரவாத இயக்கங்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். இந்து இயக்க நிர்வாகிகளை கொலை செய்தவர்கள், கொலைவெறி தாக் குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி னேன். அனைத்தையும் பொறுமை யாக கேட்ட ராஜ்நாத் சிங், உரிய நட வடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.