

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ‘வால்வ்’ கட்டமைப்பில் குறைபாடு ஏதுமில்லை என அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (ஏஇஆர்பி) தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய முதல் யூனிட்டில் பராமரிப்புப் பணி நடைபெற்ற போது, வெந்நீர் கசிவால் ஆறு ஊழியர்கள் காயமடைந் தனர். வால்வ் கட்டமைப்பில் குறை இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
“500 மி.மீ. அளவுள்ள வால்வை கழற்றியபோது, வெந்நீர் மேலே தெறித்ததால் பணியாளர்கள் காய மடைந்துள்ளது முதல்கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது. பராமரிப்புப் பணிகளுக்கு முன்னதாக, வெந்நீர் போதிய அளவில் வடியாததே விபத்துக்குக் காரணம். வால்வ் கட்டமைப்பில் குறைபாடு ஏதுமில்லை.” என ஏஇஆர்பி-யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.