

மதுரை: பள்ளி, கல்லூரி வளாகப் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் ஆக.29-ம் தேதி முதல் புகார் தெரிவிக்கும் வகையில் 10 மாவட்டங்களுக்கான தனித்தனி தொடர்பு எண்களை தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் இன்று வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக காவல் துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டலத்தில் 4 சரக டிஐஜிகள், எஸ்பிக்கள் மேற்பார்வையில் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்தும், போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களது சொத்துகள், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன.
காவல் துறை சார்பில் கஞ்சா மற்றும் போதை வஸ்துகளால் ஏற்படும் சமுதாய பாதிப்பு குறித்து பள்ளி,கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, சமூக விரோதிகள் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைப் போல ஊடுருவி பள்ளி, கல்லூரி வளாகத்திலேயே கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. இதுபோன்று இளைஞர்களின் வாழ்வை கெடுக்கும் செயலை முற்றிலுமாக வேரறுக்க வேண்டியது அவசியம். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.
இதனை தடுக்கும் வகையில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் 10 மாவட்டங்களுக்குரிய பிரத்யேக தொடர்பு எண்களை வெளியிட்டு, ஆக.29-ம் தேதி முதல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி வளாகங்களிலோ அல்லது அதற்கு அருகிலோ மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தால் இதுதொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி / கல்லூரி நிர்வாகத்தினர், பொதுமக்கள் பிரத்யேக எண்கள் நாளை முதல் தொடர்பு கொள்ளலாம். புகார் அளிக்க தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்:
இந்த எண்களை அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர் பெயர், விவரங்கள் பாதுகாக்கப்படும்” என்று இவ்வாறு அவர் கூறினார்.