

இன்று உலக முட்டை தினம்
தமிழகத்தின் நெல் வயல்களில் மேய்ச்சலுக்கு விட்டு வளர்க்கப்படும் வாத்துகளின் முட்டைகளுக்கு, கேரள மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில், நெல்வயல்கள் நிறைந்த தஞ்சாவூர், ஆரணி, புதுக்கோட்டை, கோபிச்செட்டி பாளையம், தேனி, பழநி, ஆயக் குடி, மடத்துக்குளம், குமரலிங்கம், கல்லாபுரம், ஆனைமலை, சேத்து மடை பகுதிகளில் வாத்து மேய்ச்சல் நடைபெற்று வருகின்றன. நெல் வயல்களில், அறுவடைக்குப் பிறகு சிதறிக் கிடக்கும் நெல்மணிகள், புழு, பூச்சி, தவளை, நண்டு, நத்தை உள்ளிட்டவற்றை உணவாக உண்டு வளரும், இந்த வாத்து களில் இருந்து பெறப்படும் முட்டைகளுக்கு கேரள மாநிலம் மிகப்பெரிய பொருளாதாரச் சந்தை யாக உள்ளது.
கேரள கடைகளில் நாட்டுக்கோழி முட்டை, பண்ணைக் கோழி முட்டைகள் கிடைத்தாலும், தமிழகத்தில் இருந்து வரும் வாத்து முட்டைகளை அதிகம் வாங்கிச் செல்கின்றனர்.
ஆனைமலைப் பகுதியில் அறுவடை முடிந்த நெல் வயல் களில், வாத்து மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் மோகன்தாஸ், ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
இயற்கையில் கிடைக்கும் உணவுகளில் பாலும், முட்டையும் அதிக சத்து கொண்டவை.
சாதாரண கோழி முட்டையை விட, வயல்களில் இயற்கை முறை யில் வளர்க்கப்படும் வாத்துகளின் முட்டைகளில் மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறி, பாலக்காடு, கொல்லம், திருச்சூர், ஆழப்புழா, அரிப்பாடு பகுதிகளில் இருந்து வரும் கேரள வியாபாரிகள், வயல் களில் வாத்துப்பட்டி அமைந்திருக் கும் இடத்திலேயே வந்து முன்பணம் கொடுத்து முட்டைகளை வாங்கிச் செல்கின்றனர்.
3 வகை வாத்துகள்
தமிழகத்தில், வாத்து மேய்ப்ப வர்கள் நாட்டு வாத்து, ஆரணி வாத்து, கொல்லம் வாத்து என 3 வகையான வாத்துகளை வைத் துள்ளனர். தமிழகத்தில் பல பகுதி களுக்கும் மேய்ச்சலுக்கு செல்கின் றனர். வாத்துகள் நெல் வயல்களில் உள்ள புழு, பூச்சிகளை அழிப்ப தால், விவசாயிகள் வயல்களில் மேய்ச்சலுக்கு விட அனுமதிக் கின்றனர்.
ஒரு முட்டை ரூ.6
அறுவடை முடிந்த நெல் வயல்களில், பகலில் வாத்து களை மேயவிட்டு, இரவில் பட்டியில் அடைத்து விடுவோம். பெரும்பாலும் காலை 5 மணியள வில் வாத்துகள் முட்டையிடத் தொடங்கும். வாத்துகள் தங்களு டைய 4-வது மாதத்தில் இருந்து முட்டையிடத் தொடங்கும்.
நன்றாக உணவு கிடைக்கும் பட்சத்தில் ஒரு வாத்து ஆண்டுக்கு 150 முதல் 200 முட்டைகள் இடும். ஒரு முட்டை 6 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வாத்து முட்டைகள் குழந்தை களின் சளித்தொல்லை, ஆஸ்துமா, அதிகப்படியான உடல் வெப்பம், மூலம் நோய் ஆகியவற்றை குணப்படுத்துவதாக நம்பப்படு கிறது. கிராமப்புறங்களில் குழந்தை களுக்குத் தருவதற்கு அதிகம் வாங்கி செல்கின்றனர் என்றார்.
ஆரோக்கியமான மனிதன் ஆண்டுக்கு சராசரியாக 180 முட்டை கள் சாப்பிட வேண்டும். கலப்படம் செய்யமுடியாத இயற்கை உண வான முட்டை நுகர்வின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, 1996-ம் ஆண்டில் இருந்து அக்டோபர் 2-வது வெள்ளிக்கிழமை ‘உலக முட்டை தினம்’ கொண்டாடப்படுகிறது.