3 தொகுதிகளில் பறக்கும்படை சோதனை தொடங்கியது: தேர்தல் பார்வையாளர்கள் நவ. 3-ல் தமிழகம் வருகை - தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

3 தொகுதிகளில் பறக்கும்படை சோதனை தொடங்கியது: தேர்தல் பார்வையாளர்கள் நவ. 3-ல் தமிழகம் வருகை - தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்
Updated on
1 min read

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பறக்கும்படை சோதனை தொடங்கி யுள்ளது. இந்த தொகுதிகளுக் கான 6 பார்வையாளர்கள் நவம்பர் 3-ம் தேதி வருகின்றனர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப் பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.

இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிக அளவு பணம் விநியோகிக் கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகுதி களுக்கான தேர்தலை ஆணையம் தள்ளிவைத்தது. தற்போது, இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கெனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள், தேர் தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் இதுவரை எந்த தடையும் விதிக்கவில்லை.

பண விநியோகம் தொடர்பாக, தொகுதி தேர்தல் பார்வையாளர் களாக இருந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தேர்தல் ஆணை யத்துக்கு அறிக்கைகள் அனுப்பி யுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சம்பந்தப் பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு அக்கட்சிகளும் பதில் அளித்துள்ளன. இந்த பதில்கள் சட்டரீதியாக ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நட வடிக்கை மேற்கொள்ளும்.

தேர்தல் நடக்கவுள்ள 3 தொகுதிகளுக்கும் தொகு திக்கு 2 பேர் வீதம் 6 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப் படுகின்றனர். அவர்கள் நவம்பர் 3-ம் தேதி வருகின்றனர். கூடுத லாக பார்வையாளர்கள் தேவைப் படும் பட்சத்தில் மேலும் சிலர் வரவழைக்கப்படுவர். 3 தொகுதி களிலும் நிலையான கண்காணிப் புக்குழு மற்றும் பறக்கும்படை கள் அமைக்கப்பட்டுள்ளன. இப் படையினர் இன்று (18-ம் தேதி) முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுழற்சி முறையில் இரவு பகலாக பறக்கும்படையினர் சோதனை மேற்கொள்ள உத்தர விடப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின் போது டாஸ்மாக் மதுபான விற்பனை கண்காணிக்கப்பட்டது. அதேபோல, தற்போதும் இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கும் 10 நாட்களுக்கு முன்பிருந்து மதுபான விற்பனை கண்காணிக்கப்படும்.

அடுத்த சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. கடந்த ஆண்டைப்போல வெள்ள பாதிப்பு ஏற்பட்டால்கூட, வாக்குப்பதிவை நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in