3 தொகுதி திமுக வேட்பாளர்கள் யார்?- சென்னையில் இன்று நேர்காணல்

3 தொகுதி திமுக வேட்பாளர்கள் யார்?- சென்னையில் இன்று நேர்காணல்
Updated on
1 min read

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப் பரங்குன்றம் தொகுதிகளுக்கு திமுக சார்பில் விருப்ப மனு அளித் தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்படுகிறது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆளுங்கட்சியான அதிமுக, 3 தொகுதிகளுக்கும் வேட் பாளர்களை அறிவித்துள்ளது. எம்.ரங்கசாமி (தஞ்சாவூர்), வி.செந் தில் பாலாஜி (அரவக்குறிச்சி), ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக திமுக தலை வர் கருணாநிதி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று ஆலோ சனை நடத்தினார். கோபாலபுரம் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின், துரைமுரு கன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங் கோவன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். அதிக வாக்குகளை பெறும் வகையில் வேட்பாளர்களை நிறுத்துவது, பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கருணாநிதி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த தொகுதிகளில் ஏற்கெ னவே போட்டியிட்ட கே.சி.பழனிச் சாமி (அரவக்குறிச்சி), டாக்டர் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), மு.மணிமாறன் (திருப்பரங்குன்றம்) ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், திருப்பரங்குன்றத்தில் வலுவான வேட்பாளரை நிறுத்த ஸ்டாலின் விரும்புவதாகக் கூறப் படுகிறது. இது குறித்தும் நேற் றைய கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், 3 தொகுதிகளி லும் போட்டியிட விருப்பம் தெரி வித்து நேற்று மாலை வரை 30 பேர் மனு அளித்துள்ளனர். அவர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரை முருகன் ஆகியோர் இன்று நேர் காணல் நடத்தவுள்ளனர். ஓரிரு நாளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என திமுக நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in