Published : 20 Oct 2016 09:51 am

Updated : 20 Oct 2016 09:51 am

 

Published : 20 Oct 2016 09:51 AM
Last Updated : 20 Oct 2016 09:51 AM

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்துள்ள பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி வினா-வங்கி, மாதிரி வினா புத்தகம்

2

அக்.25 முதல் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்துள்ள பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கான வினா-வங்கி, மாதிரி வினா, தீர்வுப் புத்தகம் வருகிற 25-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வண்ணம் வினா-வங்கி, மாதிரி வினா-ஏடுகள் மற்றும் தீர்வு புத்தகங்களை (சொல்யூஷன் புக்) தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் ஆண்டுதோறும் அச்சிட்டு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் அவை விற்பனை செய்யப்பட உள்ளன.

பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர் களுக்குரிய வினா வங்கி புத்தகங் கள் அச்சிடும் பணி முடிவடைந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவு மற்றும் 10-ம் வகுப்பு வினா வங்கி, மாதிரி வினா புத்தகம் அக்டோபர் 25-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும். பிளஸ் 2 வணிகவியல், கணக்குப்பதிவியல் பொருளா தாரம், வணிகக் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு வினா வங்கி புத்தகம் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புத்தகங்கள் நவம்பர் மாத இறுதியில் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

பிளஸ் 2 வினா-வங்கி, மாதிரி வினா, தீர்வு புத்தகங்கள் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் ஒவ்வொரு பாடவரிசைக்கும் ரூ.30 முதல் ரூ.100 வரையும், 10-ம் வகுப்பு வினா-வங்கி மற்றும் அனைத்துப் பாடங்களுக்கும் பொதுத்தேர்வு வினாத்தாள் தொகுப்பு ஆங்கில வழியில் ரூ.220 வீதமும், தமிழ் வழியில் ரூ.225 வீதமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி வினா வங்கி, மாதிரி வினா, தீர்வு புத்தகங்கள் கிடைக்கும் மையங்கள் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிடைக்குமிடங்கள்

சென்னை: 1. அரசு மேல் நிலைப்பள்ளி, எம்எம்டிஏ காலனி, அரும்பாக்கம், 2. ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, 3. எம்சிசி மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு.

காஞ்சிபுரம்: அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குரோம் பேட்டை.

திருவள்ளூர்: ஆர்எம் ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்.


தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்துள்ள பிளஸ் 2எஸ்எஸ்எல்சி வினா-வங்கிமாதிரி வினா புத்தகம்:அக்.25 முதல் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author