

அமெரிக்கா செல்வதற்கான விசா பெறுவதற்கு வரும் டிசம்பர் மாதம் வரை நேர்காணலுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்திலும், 4 துணைத் தூதரகங்களிலும் தற்போது முதல் வரும் டிசம்பர் மாதம் வரை ஆயிரக்கணக்கில் கூடுத லாக விசா நேர்காணல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெ ரிக்கா செல்ல விரும்புவோர் நேர்காணல் நேரத்தைப் பெறுவதற்குக் காத்திருக்க நேர்ந்தது. தூதரகங்களில் பணியின் தேவைக்கு ஏற்ப தற்காலி கமாகக் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களுக்குக் காத் திருப்பின்றி உடனடியாக நேரம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே விசா நேர்காணல் நேரத்தைப் பதிவு செய்தவர்கள் அதை மாற்றியமைத்து இப்போது புதிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தக் குறுகிய கால வாய்ப்பைப் பயன்படுத் திக் கொள்ளலாம் என சென்னை யில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.