Published : 15 Jun 2014 01:00 AM
Last Updated : 15 Jun 2014 01:00 AM

தமிழக பாஜக-வை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பொன்.ராதாகிருஷ்ணன் திட்டம்

தமிழக பாஜக-வை பொன்.ராதா கிருஷ்ணன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பதால் புதிய தலைவரை நியமிப்பதில் சிக்கல் நீடிப்பதாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக பாஜக தலைவராக இன்னும் ஒன்றரை ஆண்டுகள் நீடிக்கலாம். ஆனால், அவர் மத்திய அமைச்சராகிவிட்ட தால் தமிழக பாஜக-வுக்கு புதிய தலைவர் நியமனம் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் இருந்து ’தி இந்து’-விடம் பேசியவர்கள் கூறியதாவது:

’’தமிழக பாஜக தலைவர் பத விக்கு கட்சியின் துணைத் தலைவர் ஹெச்.ராஜாவும் அமைப்புப் பொதுச் செயலாளர் மோகன் ராஜுலுவும் தீவிரமாக முட்டி மோது கிறார்கள். இதில் மோகன்ராஜுலுவை பொன்.ராதாகிருஷ்ணனும் ஹெச்.ராஜாவை இல.கணேசனும் ஆதரிக்கிறார்கள்.

ஆனால், ’அமைப்புப் பொதுச் செயலாளராக இருப்பவர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து இரண்டாண்டுகள் கழித்துத்தான் தலைவர் பதவிக்கு வரமுடியும். எனவே, மோகன்ராஜுலுவுக்கு இப்போதைக்கு தலைவர் பதவி கொடுக்க முடியாது’ என ஹெச்.ராஜா-வுக்கு ஆதரவானவர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள். அதே சமயம், தமிழக பாஜகவை பொன்.ராதாகிருஷ்ணன் தனது கைக்குள்ளேயே வைத்திருக்க நினைக்கிறார். அதனால், ‘கட்சியின் கட்டுக்கோப்பு கலையாமல் இருக்க வேண்டுமானால் நான் சொல்லும் நபரை தலைவராக்க வேண்டும்’ என்று மேல்மட்டத் தலைவர்களை வலியுறுத்தி வருகிறார்.

மோகன்ராஜுலுவுக்கு இல்லா விட்டால் வானதி சீனிவாசன் அல்லது கருப்பு முருகானந்தம் இந்த இருவரில் ஒருவரை தலைவராக்கலாம் என்று பொன்னார் தரப்பிலிருந்து பிரஷர் கொடுக்கிறார்கள். தேசிய தலைவர்களின் சிபாரிசில் ஹெச்.ராஜா தலைவர் பதவிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படும் சிலர், 84 வயதான முன்னாள் மாநிலத் தலைவர் கே.என்.லட்சுமணனை தலைவராக்கவும் முயற்சி எடுக்கிறார்கள்’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x