

திருநெல்வேலி மாவட்டம் செங் கோட்டை அருகே உள்ள மீனாட்சி புரத்தில் ராம்குமாரின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
சென்னையில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட் டிருந்தார். அங்கு கடந்த 18-ம் தேதி மின் வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் பிற்பகல் அவரது தந்தை பரம சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராம்குமாரின் உடல் நேற்று காலை மீனாட்சிபுரத்துக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பல்வேறு கட்சிகள், தலித் அமைப்புகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 3.40 மணிக்கு அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள மயானத் துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல் லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
ராம்குமாரின் உடல் அடக் கத்தையொட்டி நேற்று முன்தினம் இரவில் இருந்தே மீனாட்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மீனாட்சிபுரம் பகுதியில் இறந்த வர்களின் உடல்கள் பெரும்பாலும் தகனம் செய்யப்படுவதுதான் வழக் கம். ஆனால் ராம்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஒரு வேளை மீண்டும் பிரேதப் பரி சோதனைக்கு நீதிமன்றம் உத்தர விட்டால் சடலத்தை தோண்டி எடுக்க ஏதுவாகவே அடக்கம் செய் யப்பட்டதாகக் கூறப்படுகிறது.