

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்று, கோவையில் பிடிபட்ட 14 இளைஞர்களிடம் வரும் 14-ம் தேதி வரை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை உக்கடத்தைச் சேர்ந்த அபு பஷீர் (எ) ரஷீத்(26) உள் ளிட்ட 6 பேரை, ஐ.எஸ். பயங்கர வாத இயக்கத்துடன் தொடர்பு உடையவர்கள் என்று கூறி, என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி கேரள மாநிலத்தில் கைது செய்த னர். கைதான அபு பஷீரின் செல் போன்கள் மற்றும் மடிக்கணினியை ஆய்வு செய்ததில், கோவையைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து, கல்லூரி மாணவர்கள், மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 14 பேரைப் பிடித்து, என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலத் தில் கைது செய்யப்பட்ட 6 பேரை காவலில் எடுத்துள்ள என்ஐஏ அதி காரிகள், அவர்களிடம் வரும் 14-ம் தேதி வரை விசாரிக்க உள்ளனர். இதையடுத்து, கோவையில் பிடி பட்ட 14 பேரிடமும், வரும் 14-ம் தேதி வரை விசாரிக்க முடிவு செய் துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரி கள் தரப்பில் கூறும்போது, “ஐ.எஸ். அமைப்பினருடன் தொடர்பு இருக்க லாம் என்ற சந்தேகத்தின்பேரில் இதுவரை 14 பேரைப் பிடித்து, விசாரித்து வருகிறோம். கேரளா வில் கைது செய்யப்பட்ட 6 பேரை காவலில் எடுத்துள்ள அதிகாரி கள், வரும் 14-ம் தேதி வரை அவர் களிடம் விசாரிக்கத் திட்டமிட்டுள்ள னர். அப்போது, கைது செய்யப் பட்டவர்கள் அளிக்கும் தகவலை உறுதி செய்யவும், மேல் விவரங் களைச் சேகரிக்கவும், கோவையில் பிடிபட்ட 14 பேரிடமும் தொடர்ந்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். பிடிபட்டவர் களில் 2 பேர் மீதான சந்தேகம் அதிகரித்துள்ளது. எனினும், விசார ணையின் முடிவுக்குப் பின்னரே, மேல்நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்றனர்.