தேமுதிகவில் 18 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம்

தேமுதிகவில் 18 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம்
Updated on
1 min read

தேமுதிகவில் 18 மாவட்டங்களில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த பொறுப்பாளர்களை மாவட்ட செயலாளர்களாக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தேமுதிகவில் 18 மாவட்டங்களில் பொறுப்பாளர்களாக செயல்பட்டு வந்த பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, வடசென்னை மாவட்டத்துக்கு ப.மதிவாணன், தென் சென்னை வடக்கு மாவட்டத்துக்கு வி.சி.ஆனந்தன், தென் சென்னை தெற்கு மாவட்டத்துக்கு பி.பிரபாகரன், மேற்கு சென்னை மாவட்டத்துக்கு ஜெ.தினகரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு இரா.சு.சேகர், கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்துக்கு காட்டன்.ஆர்.செந்தில், கோவை மாநகர் மேற்கு மாவட்டத்துக்கு எஸ்.எம்.பி.முருகன் ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக செயல்படுவர்.

இதேபோல், வேலூர் மத்திய மாவட்டத்துக்கு எஸ்.ஸ்ரீதர், விருதுநகர் மாவட்டத்துக்கு எம்.செய்யது காஜா ஷெரீப், கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்துக்கு டி.ஜெகநாதன், ஈரோடு வடக்கு மாவட்டத்துக்கு பி.கே.சுப்பிரமணி, ஈரோடு தெற்கு மாவட்டத்துக்கு ப.கோபால், திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு கே.ஜி.முத்துவேங்கடேஷ், தேனி மாவட்டத்துக்கு எம்.என்.கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு எம்.அழகர்சாமி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு எஸ்.ஆறுமுக நயினார், திருவாரூர் மாவட்டத்துக்கு எம்.சண்முகராஜ், சேலம் மேற்கு மாவட்டத்துக்கு கே. சுரேஷ்பாபு ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.

மேற்கண்ட நிர்வாகிகளுக்கு தேமுதிகவின் மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வட்டம், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்.

மேலும், வட சென்னை மாவட்ட பொறுப்பாளர்களாக செயல்பட்டு வந்த கு.நல்லதம்பி, மு.தளபதி, மேற்கு சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த எஸ்எஸ்எஸ்.யு.சந்திரன், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்த பி.ஆனந்தபாபு, தேமுதிக தொழிற்சங்க பேரவையின் துணைத்தலைவராக செயல்பட்டு வரும் இரா.சு.சேகர் ஆகியோர் அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து மட்டும் விடுவிக்கப்படுகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in