Last Updated : 12 Jun, 2014 10:33 AM

 

Published : 12 Jun 2014 10:33 AM
Last Updated : 12 Jun 2014 10:33 AM

உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மாங்கூழ், அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சீனாவுக்கு ஏற்றுமதியாகும் மாங்கூழ் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

உலகில் 63 நாடுகளில் மா பயிரிடப்படுகிறது. மொத்த மாம்பழ உற்பத்தியில் 19 மில்லியன் டன் மாம்பழங்கள் இந்தியாவில் உற்பத்தியாகின்றன. தமிழகத்தில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 926 ஹெக்டேர் பரப்பில் மா பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

மா சீசன் காலங்களில் மட்டுமே மாங்கூழ் தயாரிப்பு பணிகள் நடக் கும். அதாவது மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் மிக அதிக அளவில் மாங்கூழ் தயாரிக்கப் படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி, தை மாதங்களில் மாமரங்களில் பூ பூக்கத் தொடங்கும். நடப்பாண் டில் மாமரங்களில் உள்ள இலை களை மறைக்கும் வகையில் 100 சதவீதம் பூக்கள் பூத்து குலுங்கின. ஆனால் மழை காரணமாக காய்ப்பு குறைந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மா வரத்தும் அதிகரித்துள்ளது.

பல ஆலைகள் மூடல்

மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மாங்கூழ் தயாரிக்கும் தொழிற் சாலைகள் இயங்கின. ஏற்றுமதிக்கு ஏற்ற தரம், சுத்தம் ஆகியவற்றை கடைபிடிக்காத காரணத்தால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தற்போது கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணத்தில் சுமார் 25 தொழிற் சாலைகள் மட்டுமே இயங்கு கின்றன.

அந்நிய செலவாணியாக 500 கோடி

200 டன் கொள்ளளவு உடைய பீப்பாய்களில் (பேரல்கள்) மாங் கூழ் நிரப்பி ஏற்றுமதி செய்யப் படுகிறது. ஆஸ்பெடிக் முறையில், பேரல்களில் காற்று புகாவண்ணம் மாங்கூழ் நிரப்பப்பட்டு ஏற்றுமதி ஆகிறது. இதனால் 2 ஆண்டுகள் வரை மாங்கூழ் கெடாமல் இருக்கும். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சாலை களில் இருந்து சுமார் 10 ஆயிரம் கண்டெய்னர்களில் ஏற்றுமதி செய் யப்படுகிறது. ஒரு கண்டெய்னரில் 17 டன் மாங்கூழ் இருக்கும். இதன் மூலம் நம் நாட்டுக்கு அந்நிய செலாவணியாக சுமார் ரூ.500 கோடிவரை கிடைக்கிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

ஒரு டன் அல்போன்சா ரூ. 25 ஆயிரம், தோத்தபூரி எனப்படும் பெங்களூரா ரகம் ரூ.10 ஆயிரம் வரைக்கும் தொழிற்சாலைகளில் பெறப்படுகிறது.

மாங்கூழ் தயாரிப்பில் ஈடு பட்டுவரும் தேவராஜ் குரூப்ஸ் மதியழகன் ‘தி இந்து'விடம் கூறு கையில், தொடக்கத்தில் சவூதி அரேபியா, துபாய், ஏமன், மலே சியா, சிங்கப்பூர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதி செய்து வந்தோம். கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடு களுக்கும் மாங்கூழ் ஏற்றுமதி செய்கிறோம். குறிப்பாக சீன மக்கள் அதிக அளவில் மாங்கூழை விரும்பி வாங்குகின்றனர். எதிர் காலத்தில், கூடுதலாக 25 சதவீதம் மாங்கூழ் சீனாவுக்கு ஏற்றுமதி யாகும் என எதிர்பார்க்கிறோம்.

மாவட்டத்தில் மாங்கூழ் தொழிற் சாலைகளுக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், சேந்த மங்கலம் உள்ளிட்ட பல இடங் களிலிருந்து மாம்பழம் கொண்டு வரப்படுகிறது. மாங்கூழ் தயாரிப் பில் உள்நாட்டு தேவைக்கு 40 சத வீதமும், வெளிநாடு ஏற்றுமதிக்கு 60 சதவீதமும் பயன்படுத்தப்படு கிறது. இடைத்தரகர்கள் இல்லா மல் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறோம். இத னால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x