வளர்ச்சிக்கு வள்ளுவம் வித்திடுகிறது: நீதிபதி சொக்கலிங்கம் பெருமிதம்

வளர்ச்சிக்கு வள்ளுவம் வித்திடுகிறது: நீதிபதி சொக்கலிங்கம் பெருமிதம்
Updated on
1 min read

வள்ளுவம் வளர்ச்சிக்கு வித்திடு கிறது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தென் மண்டல அமர் வின் முன்னாள் நீதித்துறை உறுப் பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் சார்பில் 27-வது குழந்தை களுக்கான அறிவுக் களஞ்சியம் பரிசளிப்பு விழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கு வோருக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில் நேற்று நடைபெற்றது. அதில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் முன்னாள் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம் பங்கேற்று அனைவருக்கும் பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கிப் பேசிய தாவது:

ஒன்றே முக்கால் அடியில் உலகத்தையே புகுத்தியவன் வள்ளுவன். நான் 3-ம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் நடை பெற்ற திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றேன். நான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவது அதுவே முதல் முறை. அன்று முதல் எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. பின்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும் உயர்ந்தேன். அதற்கு காரணம் வள்ளுவம்தான். வள்ளுவம் நம் வளர்ச்சிக்கு வித்திடுகிறது.

இந்த அமைப்பு, திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி மாணவர்களுக்கு அறிவுக் களஞ்சியம் பரிசுகளை வழங்குவது பாராட்டுக்குரியது. இதன் மூலம் குழந்தைகள் மனதில் இந்த சங்கம் விளக்கேற்றியுள்ளது.

இந்த குழந்தைகள் அகல் விளக்குகளைப் போன்றவர்கள். இந்த சங்கம் ஏற்றும் விளக்குகள் மேல் நோக்கித்தான் எரியும். பரிசு பெற்ற இந்த குழந்தைகள், தங்கள் வாழ்வில் பல்வேறு வளர்ச்சிகளைப் பெற வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு திருக்குறள் ஒப்பித்தல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டன. அவற்றில் வெற்றிபெற்ற 150 மாணவ, மாண வியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவிகள் எஸ்.சமிக்ஷா, எஸ்.அபிநயா, டி.மோக்ஷிகா ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

கண்ணப்பன்- வாசுகி அறக்கட் டளை தலைவர் வாசுகி கண்ணப்பன், சாய்ராம் பொறியியல் கல்லூரி மேலாண்மை துறை தலைவர் கே.மாறன், மும்பை ஞாயிறு ராமசாமி அறக்கட்டளை தலைவர் ஞாயிறு ராமசாமி, மைசூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி கு.புகழேந்தி, கோதண்டராமன் அறக்கட்டளை நிர்வாக அறங் காவலர் சு.கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு விருதுகள் வழங் கப்பட்டன.

நிகழ்ச்சியில், மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்க செயலர் சேயோன், இணை செயலர் ஹேமா சந்தானராமன், பாரதிய வித்யாபவன் இயக்குநர் கே.என்.ராமசாமி, கற்பகவல்லி வித்யாலயா தாளாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in