திமுகவில் இணைவதாக விஷமப் பிரச்சாரம்: அதிமுக எம்எல்ஏ ஆவேசம்

திமுகவில் இணைவதாக விஷமப் பிரச்சாரம்: அதிமுக எம்எல்ஏ ஆவேசம்
Updated on
1 min read

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி, திமுகவில் இணைய உள்ளதாக நேற்று தகவல்கள் பரவின.

இதையடுத்து, அமுல் கந்தசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “திமுகவினர் விஷமத்தனமான பிரச்சாரத்தை செய்துள்ளனர்.

இதுபோன்ற பிரச்சாரங்களை செய்வது திமுகவின் வாடிக்கை. நான் அன்னூரில் குடியிருக்கிறேன். 150 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை புறக்கணிக்கும் திமுகவுக்கு ஒருபோதும் நான் தலைவணங்க மாட்டேன். இறக்கும்வரை அதிமுகவில்தான் இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in