

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள ககாரின் விண்வெளி பயிற்சி மையத்துக்கு (ஜிசிடிசி) ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் முதல் குழு சென்றுவந் துள்ளது.
இதுகுறித்த செய்திக்குறிப்பு:
மாஸ்கோ ககாரின் விண்வெளி பயிற்சி மையத்துக்கு இந்தியாவின் தூதராக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா செயல்படுகிறது.
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 9 மாணவர்கள் அடங்கிய குழு ஜிசிடிசி-க்கு சென்றது. இந்திய இளம் விஞ்ஞானி 2016 சிவா சூரியாவும் இந்த பயணத்தில் இடம்பெற்றார்.
அக்டோபர் 12-ம் தேதி அங்கு சென்ற அக்குழுவினர் மாஸ்கோ விமான போக்குவரத்து நிறுவன பயிலரங்கத்தில் பங்கேற்றனர். அங்கு உள்ள 360 டிகிரி ஆய்வகம், சிமுலேஷன் ஆய்வகம் ஆகியவற்றுக்கும் சென்றனர்.
ஜிசிடிசி விண்வெளி வீரர் சலிஜன் ஷரிபாவ் தனது விண்வெளி அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். பயிலரங்கை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பைப் போன்ற ரஷ்யாவில் உள்ள ராஸ்காஸ்மாஸ் ஸ்டேட் கார்ப்பரேஷனின் ஆல்லா, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்த கல்விப் பயணம் அக்.19-ம் தேதி நிறைவு பெற்றது.