

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற சீமான், வேல்முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து பல்வேறு கட்சிகள், தமிழ் அமைப்புகள் இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. இதில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, ‘‘இலங்கையில் 2 தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. சிறிசேனா தலை மையில் அரசு அமைந்த பிறகும் தமிழர்களின் நிலை யில் எந்த மாற்றமும் இல்லை. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ராணுவத்தினரைத் திரும்பப் பெற வேண்டும். இலங்கை அரசு தமிழர்களுக்கு தொடர்ந்து செய்து வரும் துரோகத்தை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது’’ என்றார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தடுப்புகளைத் தள்ளி விட்டு இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகை யிட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது. போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், வேல்முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானவர்களை போலீ ஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.