

சென்னை: கிராவிட்டி ஈவென்ட் அஃபயர்ஸ் நிறுவனம் கைவினைஞர்கள், நெசவாளர்கள், விற்பனையாளர்களுடன் இணைந்து, தென்னிந்திய கலை மற்றும் கைவினைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் கிராவிட்டி கண்காட்சிகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.
வெள்ளி, ரத்தினக்கல் பதித்த கைவினை நகைகள், வீட்டு அலங்கார ஓவியங்கள், கைத்தறி துணி வகைகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் வாங்க சென்னையில் கிராவிட்டி ஈவென்ட்ஸ் நடத்தும் கண்காட்சியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் கடந்த ஆக 19-ம் தேதி கண்காட்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை காணலாம்.
இங்கு அழகிய ஆடைகள், கைத்தறி பட்டு, கையால் ஆன நகைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கலைப் பொருட்கள் உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பட்டு புடவைகள் கிடைக்கின்றன. மேலும் குறிப்பிட்ட பகுதிகளின் தனிச்சிறப்பு வாய்ந்த துணி வகைகளை வாங்க முடியும். பழங்குடியினரால் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட நகைகளையும் காணலாம்.
இவற்றை வாங்குவதன் மூலம் கைவினைஞர்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கி, அவர்களின் வளர்ச்சிக்கு உதவ முடியும். இவ்வாறு கிராவிட்டி ஈவென்ட் அஃபயர்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.