Published : 15 Oct 2016 09:22 am

Updated : 15 Oct 2016 09:22 am

 

Published : 15 Oct 2016 09:22 AM
Last Updated : 15 Oct 2016 09:22 AM

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: சந்தேக நபர் படம் வெளியீடு

இந்து முன்னணியைச் சேர்ந்த சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், நேற்று சந்தேக நபர் குறித்து புதிய படத்தை வெளியிட்டனர்.

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் மர்ம நபர்களால், கடந்த 22-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து துடியலூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் குறித்து சுமார் 600 பேர் வரை விசாரிக்கப்பட்டு உள்ளனர்.

சிபிசிஐடி போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில், கடந்த வாரம் 4 பேரின் புகைப்படத்தை வெளியிட்டனர். புகைப்படம் வெளியானதும் புகைப்படத்தில் இருந்த 2 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி, கொலை சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று உறுதி அளித்தனர்.

இந்நிலையில், கோவை சிபிசிஐடி போலீஸார் நேற்று புதிய படத்தை வெளியிட்டு, கூறியதாவது: சசிகுமார் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அளித்த சாட்சியம் உதவியுடன், படம் ஒன்று வரையப்பட்டது. வரையப்பட்ட படத்தில் உள்ள நபர் பற்றிய

தகவல் தெரிந்தால், கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் பிஆர்எஸ் வளாகத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸாரை அணுக

லாம். சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளரை 94981 04441 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. sidcbcidcbe@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்குசந்தேக நபர் படம் வெளியீடு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author