

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ரூ.350 கோடி, தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1,650 கோடி என ரூ.2 ஆயிரம் கோடியை தராமல் பாக்கி வைத் திருப்பதாக கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி கரும்பு விவசாயி கள் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தி கைதாகி இருக் கிறார்கள். இதுவரை பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நிலுவைத் தொகையை பெற்றுத்தர தமிழக அரசு எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.
சர்வதேச சந்தையில் 1 டன் சர்க்கரை ரூ.38 ஆயிரம் அளவுக்கு உயர்ந்தும்கூட விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க ஆலைகள் முன்வரவில்லை. நிலுவைத் தொகை வராததால் பயிர்க்கடனை அடைக்க முடியவில்லை. பயிர்க்கடன் பெற வங்கிகளில் அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியவில்லை என விவசாயிகள் கண்ணீர் விட்டு வருகின்றனர்.
எனவே, இனியும் தாமதிக்கா மல் கரும்பு விவசாய சங்க பிரதி நிதிகள், சர்க்கரை ஆலை நிர்வாகி களை அழைத்துப் பேசி விவசாயி களுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத்தர முதல்வரின் துறை களைக் கவனிக்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி கொண்டாட வேண்டிய நேரத்தில் விவசாயிகளைப் போராட்ட களத்துக்குத் தள்ள வேண்டாம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.