காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவை காரைக்காலுக்கு அழைக்காதது தவறு: அதிமுக கண்டனம்

காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவை காரைக்காலுக்கு அழைக்காதது தவறு: அதிமுக கண்டனம்
Updated on
2 min read

மத்திய அரசின் காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை காரைக்கால் மாவட்டத்திற்கு முதல்வர் நாராயணசாமி அழைக்காதது மிகப்பெரிய தவறு என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்எல்ஏ நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் தமிழகம் மற்றும் புதுச்சேரி தலைவர்கள் காவிரி நீர் பிரச்சினையில் தங்கள் கருத்தை வலியுறுத்தினால் சிறப்பாக இருக்கும்.

காவிரி விவசாயிகளின் நலன் கருதி உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என்று, கர்நாடக காங்கிரஸிற்கு அறிவுறுத்துமாறு காங்கிரஸ் தலைவி சோனியாவிடம் புதுச்சேரி முதல்வர் கூற வேண்டும். மத்திய அரசின் காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு தமிழகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டபோது, காரைக்கால் மாவட்டத்திற்கு அந்த குழுவை முதல்வர் நாராயணசாமி அழைக்காதது மிகப்பெரிய தவறு.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து அறிக்கை விட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். கடந்த 4 மாத கால ஆட்சியில் முதியோர் உதவித்தொகை, கல்வீடு கட்டும் மானியம் பெறுவது உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்திலும் ஒரே ஒரு புதிய நபர் கூட பயன் பெறவில்லை.

இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு புதிதாக 1,500 விண்ணப் பங்களையும் நெல்லித்தோப்பு மற்றும் உருளையன்பேட்டை தொகுதிக்கு மட்டுமே கொடுத் துள்ளனர். இதுபற்றி துறை செயலர் மற்றும் தலைமை செய லரிடம் புகார் மனு அளிக்க உள்ளோம்.

புதுச்சேரியில் 875 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங் களில் பணிபுரிபவர்களின் பணியை முதியோர் உதவித்தொகையை வழங்குவது மற்றும் குழந்தை களுக்கு சத்துணவு கொடுப்பது தான். தற்போது வங்கி மூலம் தருவதால் ரூ.20 செலவை அரசு செய்கிறது. அங்கன்வாடி ஊழி யர்கள் வேலையின்றியும், அரசு நிதி நெருக்கடியிலும் இருக்கும்போது ஆண்டிற்கு ரூ.3.50 கோடி இதனால் கூடுதல் செலவாகிறது.

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. குற்ற சம்பவங்கள் குறித்து ஆதார பூர்வமான பல விஷயங்களை என்னால் கூற முடியும். அவ்வாறு கூறினால் போலீசாராலேயே எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

முன்னாள் அமைச்சர் ராஜவேலுவின் சகோதரர் வீட்டில் வீசப்பட்ட வெடிகுண்டு பிரச்சினையை திசை திருப்பும் நோக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ் வீட்டில் வீச திட்டமிட்டதாகவும், தவறி அந்த வீட்டில் வீசப்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். ரவுடிகள் வெடி குண்டு வீசுவதற்கு முன்பு மிரட்டு வார்கள். அதுபோல் சத்தியராஜை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எனவே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த ஆளுநரிடம் புகார் தந்துள்ளோம்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் வீட்டில் வருமான வரித்துறை ஆய்வு செய்து ரூ.1.60 கோடியை எடுத்துச் சென்றது. அப்போது தான் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்து பணத்தை வாங்கிவிடுவேன் என்றார். ஆனால் இதுவரை வாங்கவில்லை. எனவே இந்திய தேர்தல் ஆணையம் நெல்லித்தோப்பு தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிப்பதற்கு முன்பு ஜான்குமார் ராஜினாமா குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

பாப்ஸ்கோ, பி.ஆர்.டி.சி., ரோடியர் மில் முறைகேடுகள் குறித்து விசாரணை குழு அமைக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், விசாரணை நடத்தி தவறுகளின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in