Published : 13 Oct 2016 10:13 AM
Last Updated : 13 Oct 2016 10:13 AM

பின்லாந்து, கனடாவைச் சேர்ந்த 2 பேருக்கு சாஸ்த்ரா - ராமானுஜன் விருது

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 2016-ம் ஆண்டுக்கான ஸ்ரீநிவாச ராமானுஜன் விருது, பின்லாந்து நாட்டின் துர்க் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த கைசாமடோமகி, கனடா நாட்டின் மெக்கில் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த மாக் சிம்ரட்ஸ்வில் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இதுகுறித்து சாஸ்த்ரா பல் கலைக்கழகம் கூறியிருப்பதாவது: குறுகிய இடைவெளிகளில் பன்முகச் செயல்பாடுகள் குறித்த இவர்களின் புரட்சிகரமான ஆய்வு கணித உலகை பிரமிக்க வைக்கிறது. சிக்கலான கேள்விகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் இவர்களின் ஆய்வு அமைகிறது. எர்டாஸ் வேறுபாடு, சவ்லாவின் இணைப்பு போன்ற கடுமையான வினாக்களுக்கு விடை தேடும் வகையில் இவர்களுடைய விளக்கம் உள்ளது.

2005 முதல் வழங்கப்படும் இந்த விருது, கணித மேதை ராமானுஜன் ஈடுபட்ட துறையில் ஆர்வம் காட்டும் இளம் கணிதவியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீநிவாச ராமானுஜன் மையத்தில் வரும் டிசம்பர் 21, 22-ம் தேதிகளில் நடைபெறும் எண்ணியல் கோட்பாடு பற்றிய பன்னாட்டுக் கருத்தரங் கின்போது இந்த விருது வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x